“அந்த தொழில் செய்யாதிங்க..” – மனைவி பேச்சை கேட்காத கணவன்..! மனைவியின் பகீர் முடிவு..!

2166

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள சுந்தர்ராஜபுரம் பகுதியில் வசித்து வருபவர்கள் மாடசாமி – ஸ்டெல்லா மேரி தம்பதியினர். பொறியாளரான மாடசாமி, அப்பகுதியில் விவசாயம் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் கணவன் மாடசாமி, விவசாயம் செய்வது ஸ்டெல்லா மேரிக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே மாடசாமியை அரசு வேலைக்கு செல்லுமாறு ஸ்டெல்லா மேரி தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்.

இதனால் கணவன் – மனைவி இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் கணவர் அரசு வேலைக்கு செல்லாமல் தொடர்ந்து விவசாயம் செய்து வருவதால், மனமுடைந்த ஸ்டெல்லா மேரி, யாரும் இல்லாத நேரம் பார்த்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பின்னர் தகவலறிந்து வந்த காவல்துறையினர் ஸ்டெல்லாமேரியின் உடலை கைப்பற்றி, சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாட்டின் முதுகெலும்பாக விவசாயம் கருதப்படும் சூழலில் கணவன் விவசாயம் செய்வதை அவமானமாக கருதி, மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of