200 ஆபாசப்படங்கள்..! கணவரின் செல்போனைக் கண்டு அதிர்ந்த பெண்..! குடும்பத்திற்கே வேட்டு வைத்த மருமகள்..!

871

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள மஸ்தான் தெருவை சேர்ந்தவர் எட்வின் ஜெயக்குமார். தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் காசாளராக பணியாற்றி வந்த இவருக்கும், தாட்சர் என்ற பெண்ணிற்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

திருமணமாகிய சில நாட்களிலேயே இருவருக்கிடையேயும் வெறுப்பும் விரக்தியும் இருந்து வந்துள்ளது. தொடர்ந்து எட்வின் தனது மனைவி மீது கோபத்தை வெளிப்படுத்தியதுடன், இரவு நேரங்களில் வெகுநேரம் செல்போனை பயன்படுத்தி வந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த தாட்சர், கணவரின் செல்போனை அவருக்கே தெரியாமல் எடுத்து பார்த்துள்ளார்.

அதில், 200-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களும், புகைப்படங்களும் இருந்துள்ளது. இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பெண், தனது மாமியார் மற்றும் நாத்தனாரிடம் கூறியுள்ளார்.

இதனை பெரிதாக அவர்கள் இருவரும் எடுத்துக்கொள்ளாத நிலையில், மாமியார் மற்றும் நாத்தானருக்கும் இடையே ஓரினச்சேர்க்கை இருப்பதை தாட்சர் கண்டறிந்தார். இதனையடுத்து அதிர்ச்சியடைந்த தாட்சர், காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

ஆனால் இதனையறிந்த எட்வின், நீதிமன்றத்தில் முன்ஜாமின் பெற்றுவிட்டு தலைமறைவானார். இருப்பினும் எட்வினை விடாத தாட்சர், வீடியோ ஆதாரங்களை மதுரை ஐகோர்ட்டில் சமர்பித்து, எட்வினுக்கு வழங்கப்பட்ட முன்ஜாமினை தள்ளுபடி செய்ய வைத்தார்.

இதையடுத்து இந்த வழக்கில் தீவிரம் காட்டிய காவல்துறையினர், எட்வின், அவரது தாய் மற்றும் சகோதரி, இவர்களது உறவுக்கார பெண் மற்றும் எட்வினுடன் வங்கியில் பணிபுரியும் தேவி பிலோ மினா ஆகிய 5 பேரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of