ஒன்றும் தெரியாத பூனைப்போல் தூக்கம்..! கமுக்கமாக புது மாப்பிள்ளை செய்த விபரீதம்..! அறையை திறந்ததும் மாமியார் அதிர்ச்சி..!

1059

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் முல வண்ணம் என்ற பகுதியில் உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த வைசாக் பைஜு என்ற நபருக்கும், கிருதிமோகன் என்ற பெண்ணிற்கும் இடையே கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

கிருதிமோகனுக்கு ஏற்கனவே ஒரு திருமணம் நடைபெற்று, 4 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. கருத்து வேறுபாட்டால் முதல் கணவரை பிரிந்த இவர் வைசாக்கை 2-வதாக திருமணம் செய்துக்கொண்டார்.

திருமணம் நடைபெற்ற சில நாட்களிலேயே, கிருதிமோகனுக்கு இருக்கும் சொத்து குறித்து, வைசாக் அடிக்கடி கேட்டு வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், கணவரை அழைத்துக்கொண்டு கிருதிமோகன் தனது தாய் பிந்து வீட்டுக்கு சென்றார்.

அன்று இரவும் சொத்து குறித்து இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று நீண்ட நேரமாகியும் தம்பதிகள் தங்கியிருந்த கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த கிருதிமோகனின் தாய், கதவை திறந்து உள்ளே சென்று பார்த்திருக்கிறார்.

அப்போது, மயக்க நிலையில் இருந்த மகளை கண்டு அதிர்ந்த பிந்து, உடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார். அங்கு கிருதிமோகனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், கழுத்தை நெறித்து அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பிந்துவிடம் தெரிவித்துள்ளனர்.

இதனைக்கேட்டு ஷாக்கான பிந்து வீட்டிற்கு சென்றிருக்கிறார். அங்கு எதுவும் தெரியாத பூனைப்போல், தூங்கிக்கொண்டிருந்த வைசாக், மாமியாரை கண்டதும் தப்பிக்க முயன்றிருக்கிறார். ஆனால் அவரால் தப்பிக்க முடியவில்லை. இறுதியில் போலீசில் நடந்தவற்றை கூறி சரணடைந்துவிட்டார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of