கணவரின் சடலத்தை பார்த்து சிரித்த மனைவி!

252

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் நகுலவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகன்மோகன் ரெட்டி அவரது மனைவி பெயர் ரஜினி.அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஜெகன்மோகன் ரெட்டிக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போனதால் அதே பகுதியில் வசித்து வரும் டாக்டர் வெங்கட நாராயணா என்பவரிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

அப்போது டாக்டர் வெங்கட நாராயணாவுக்கும், ஜெகன் மோகனின் மனைவி ரஜினிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.

இந்த விவகாரம் ஜெகன்மோகன் ரெட்டிக்கு தெரியவந்ததையடுத்து ரஜினியை கடுமையாக கண்டித்தார்.இதனையடுத்து தங்களுக்கு இடையூறாகவுள்ள ஜெகன்மோகன் ரெட்டியை கொலை செய்ய ரஜினியும், வெங்கட நாராயணாவும் திட்டமிட்டனர்.

திட்டத்தின்படி ஜெகன்மோகன் ரெட்டியை அத்மகூர் வனப்பகுதிக்கு கூட்டிச்சென்ற டாக்டர் வெங்கட நாராயணா, கூலிப்படையினரின் உதவியுடன் அவரை கொலை செய்துள்ளார்.

அதேவேளையில் தனது கணவனை காணவில்லை என காவல் நிலையத்தில் ரஜினி புகார் அளித்துள்ளார். விசாரணையை தொடங்கிய போலீசார் வனப்பகுதியில் உடலை கைப்பற்றியுள்ளனர்.

அதில் கொலை செய்யப்பட்ட ஜெகன்மோகனின் உடல் என்பது விசாரணையில் தெரியவந்தது.கணவன் இறந்தது குறித்து ரஜினிக்கு போலீசார் தகவல் கொடுத்தனர்.  சம்பவ இடத்திற்கு வந்த ரஜினி, கணவரின் உடலை பார்த்து அதிர்ச்சி அடையாமல் கதறி அழாமல் அருகில் உள்ளவர்களிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்தார்.

ரஜினி சிரிப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் அவர் மீது சந்தேகம் எழுந்தது. அதனை தொடர்ந்து விசாரணையை முடுக்கிவிட்டனர்.விசாரணையில் தானும், டாக்டரும் இணைந்தே தன் கணவனை கொலை செய்ததாக ரஜினி ஒப்புக்கொண்டார்.

இதனைத்தொடர்ந்து ரஜினி, டாக்டர் வெங்கட நாராயணா உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.