“பூமதிய விட்டு விலகிடு..” கணவரை மிரட்டிய சாமியார்..! கேட்காததால் நேர்ந்த கொடூரம்..!

408

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள தந்தை பெரியார் நகரை சேர்ந்தவர் மணிமுத்து. இவருக்கு பூமதி என்ற மனைவியும், 2 மகன்கள் மற்றும் மகள் ஒருவர் உள்ளனர். வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் மணிமுத்து, அவ்வப்போது குடும்பத்தாரை சந்தித்து வருவது வழக்கம்.

இந்நிலையில் சம்பவத்தன்றும் குடும்பத்தாரை சந்திக்க காரைக்குடிக்கு வந்துள்ளார். மொட்டை மாடியில் தூங்கிக்கொண்டிருந்த மணிமுத்து விடிந்ததும் உடல் முழுவதும் கத்தி குத்தியக்காயங்களுடன் இறந்து கிடந்தார். இதுகுறித்து அவரது மனைவி பூமதி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியாகியது. ஆம், இந்த கொலைக்கு முக்கிய காரணமே மணிமுத்துவின் மனைவி பூமதி தான். பூமதிக்கும், ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனை சேர்ந்த வேல்முருகன் என்ற சாமியாருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது.

இந்த விஷயம், ஊருக்கு வந்தபோது மணிமுத்துவுக்கு தெரிந்துள்ளது. இதனால் மணிமுத்து பூமதியை கண்டித்துள்ளார். இந்த விஷயத்தை தனது கள்ளக்காதலினிடம் பூமதி சொல்லியுள்ளார். இதையடுத்து சாமியார் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் மணிமுத்துவை மிரட்ட அவரது வீட்டிற்கு வந்தனர்.

மணிமுத்து வீட்டு மொட்டை மாடியில் தூங்கிக்கொண்டிருந்த நிலையில், அங்கு வந்த 4 பேரும் பூமதியை விட்டு விலகும்படி கூறியுள்ளனர். இதற்கு மணிமுத்து எதிர்ப்பு தெரிவித்ததால், ஆயுதங்களுடன் வந்த அந்த 4 பேரும் மணிமுத்துவை கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர்.

பின்னர் எதுவும் தெரியாததுபோல், பூமதி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் போலீசார் இவையனைத்தையும் கண்டுபிடித்தனர். பூமதி அளித்த தகவலின் பேரில், சாமியாரையும், ஆகாஷ் என்ற நபரையும் கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.