மருமகளுக்கு மாமனார் செய்த கொடுமை! மாமியார் எடுத்த விபரீத முடிவு!

1451

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பாலன் நகர் என்னும் பகுதியில் வசித்து வருபவர் முனியாண்டி(60)- பாண்டியம்மாள்(50) தம்பதியினர். இவர்களுக்கு பாண்டி என்ற மகன் உள்ளார்.

திருமாகியிருக்கும் இவருக்கு, ஒரு விபத்தில் கால்கள் இரண்டும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பாண்டியும் அவரது மனைவி மலரும் பெற்றோரின் வீட்டில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் மலருக்கு, முனியாண்டி தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் தினமும் மலர் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதனை அறிந்த பாண்டியம்மாள், தனது கணவரை கண்டித்துள்ளார்.

இருப்பினும் தொடர்ந்து தனது மருமகளுக்கு அவர் பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் இதை பொறுத்துக்கொள்ள முடியாத பாண்டியம்மாள் கூலிப் படையினரை ஏவி, கணவரை கொலை செய்துள்ளார். இதனையடுத்து பாண்டியம்மாள் போலீசில் சரணடைந்துள்ளார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருக்கும் அந்த கூலிப்படையினரை தேடி வருகின்றனர். மருமகளுக்காக கணவரை மனைவி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement