கள்ளக்காதலியுடன் தனிமையில் இருந்த கணவர்..! பேரம் பேசிய மனைவி..!

1359

கர்நாடகாவின் மான்டியா மாவட்டத்தை சேர்ந்த நபர் ஒருவர், தனது மனைவியுடன் சண்டைப்போட்டுவிட்டு தனியாக வசித்து வந்துள்ளார். அப்போது, அவருக்கும் இன்னொரு பெண் ஒருவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இந்த விஷயம் அறிந்த அந்த நபரின் மனைவி, தனது கணவரை கண்டித்துள்ளார்.

இருப்பினும், இவர் அந்த பெண்ணுடனான பழக்கத்தை நிறுத்திக்கொள்ளவில்லை. இந்நிலையில் தனது கணவர் அந்த பெண்ணுடன் தனிமையில் இருந்ததை கையும் களவுமாக பிடித்த மனைவி, தனது கணவரை விட்டு செல்லும்படி கெஞ்சி கேட்டுள்ளார்.

இதனால் இரண்டு பெண்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது எனக்கு நிறைய கடன்கள் இருப்பதை மனைவி, கள்ளக்காதலியிடம் கூறியுள்ளார். இதனைக்கேட்ட அந்த பெண் நைசாக பேசி, உன் கடனை நான் அடைக்க பணம் தருகிறேன். உனக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.

17 லட்சம் தரும்படி அந்த மனைவி கேட்க, அவ்வளவு தொகை என்னிடம் இல்லை என்று இருவரும் பேரம் பேசியுள்ளனர். இறுதியில் ரூபாய் 5 லட்சத்தை வாங்கிக்கொண்டு, எனக்கும், கணவருக்கும் சம்பந்தம் இல்லை என்று கையெழுத்து போட்டுவிட்டு, அந்த பெண் அங்கிருந்து சென்றுள்ளார்.

இந்த சம்பவத்தை பார்க்கும்போது, குஷ்பு, ராம்கி, ஊர்வசி நடித்த இரட்டை ரோஜா படத்தில் வருவதைப்போன்று உள்ளது. நிஜத்தில் நடந்தவற்றை சினிமாவில் எடுப்பது போல, சினிமாவில் நடப்பதெல்லாம் தற்போது நிஜத்தில் நடந்து வருகிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of