தற்கொலை செய்துகொண்ட கணவன். மனைவி கண்டித்ததால் ஏற்பட்ட சோகம்

325

திருவள்ளூர் வி.எம்.நகர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். மறைமலை நகரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சரஸ்வதி. திருவள்ளூர் அரசு மருத்துவ மனையில் செவிலியராக உள்ளார். இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளது.

நேற்று இரவு கார்த்திகேயன் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். இதனை மனைவி கண்டித்தார். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த கார்த்திகேயன் பமின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of