சொன்ன இடத்தில் நிற்பேன் – தமிழிசை

539

சொன்ன சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன். கோவா முதல்வரும் முன்னாள் ராணுவ மந்திரியுமான மனோகர் பாரிக்கர் மறைவுக்கு தனது இரங்கலை பதிவு செய்தார். அவரின் மறைவு நாட்டிற்கு பெரிய இழப்பு. அவரது மறைவு காரணமாக பா.ஜனதா பாராளுமன்ற குழு கூட்டம் நாளைக்கு ஒத்திவைக்கபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நாளைய தினம் நடைபெறும் பா.ஜனதா பாராளுமன்ற குழு கூட்டத்தில் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்படும். அதன்பின்பு வேட்பாளர்கள் பட்டியல் நாளைய தினமே வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.

தூத்துக்குடியில் போட்டியிடுவீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, கட்சி எங்கு நிற்க சொல்கிறதோ அங்கு நிற்பேன். கட்சியின் விருப்பம் தான் என் விருப்பம் என்று அவர் கூறினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of