காங்கிரஸ் கட்சியின் தொண்டர் பிரதமர் ஆக முடியுமா? அமித்ஷா

421

இந்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி புதியதாக பிரியங்கா காந்தியை அரசியலுக்கு அறிமுகப்படுத்தயுள்ளனர். லக்னோவில் அவருடைய பேரணிக்கு அதிகமான தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.

இதனால் பிரயங்காவின் அரசியல் வருகை குடும்ப ஆட்சியை உறுதி செய்கிறது என காங்கரிஸை பாஜக-வினர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கோத்ராவில் தொண்டர்கள் மத்தியில் பேசிய பாஜக தலைவர் அமித்ஷா, காங்கிரஸ் கட்சியில் தொண்டர்கள் யாரும் பிரதமர் ஆவதைப்பற்றி நினைக்க முடியுமா? இக்கட்சியில் பிறப்பின் போதே பிரதமர் பதவி முன்பதிவு செய்யப்படுகிறது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு திருமணம் ஆகவில்லை, எனவே உடனே பிரியங்கா காந்தியை அரசியலுக்கு வரவைத்துள்ளார் என தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of