பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் கருணை காட்டுவாரா ஆளுநர்?

722

ராஜீவ்காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யும் விவகாரத்தில் மத்திய அரசின் முடிவை மீறி தமிழக ஆளுநர் முடிவெடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் 7 பேரையும் சிறையிலிருந்து விடுவிப்பது தொடர்பாக, தமிழக அரசு ஆளுநருக்கு பரிந்துரைக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று, 7 பேரையும் விடுவிப்பது தொடர்பான இறுதி முடிவினை ஆளுநர் எடுக்க அதிகாரம் உண்டு என்றும், உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும், பேரறிவாளன் தாக்கல் செய்த கருணை மனு மீது, ஆளுநர் நினைத்தால், தமது அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலைக்கு உத்தரவு பிறப்பிக்கலாம் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

பேரறிவாளன், நளினி உட்பட 7 பேரையும் விடுவிப்பது அபாயகரமான முன் உதாரணம் ஆகிவிடும் என்றும் சர்வதேச அளவில் பின் விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நளினி, முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய 6 பேரும் கருணை மனுவை, ஆளுநருக்கு அனுப்பினால், மட்டும் ஆளுநர் முடிவெடுப்பார் எனத் தகவல் வெளியாகி உள்ளது. இதனால், அவர்கள் விடுதலை செய்யப்படுவதில் சிக்கல் எழுந்துள்ளது.

Advertisement