40 தொகுதியிலும் தனித்து போட்டியிடுவோம் – ஆம்ஸ்ட்ராங்

683

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி தலைமையில் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கலந்து கொண்டார்.

அவரிடம் தமிழகம்- புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறோம். 40 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துமாறு மாயாவதி கேட்டுக் கொண்டார்.

மேலும் தமிழகத்தில் போட்டியிடும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அடுத்த மாதம் ஏப்ரல் 10-ந்தேதி தமிழகத்தில் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளதாகவும் ஆம்ஸ்ட்ராங்கிடம் உறுதி அளித்தார்.

இதையடுத்து தேர்தலில் போட்டியிட விரும்பும் பகுஜன் சமாஜ் கட்சியினர் பெரம்பூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் விருப்ப மனு கொடுத்தனர். விருப்ப மனு கொடுத்தவர்களிடம் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், துணை தலைவர் மணிவண்ணன், பொருளாளர் கல்யாணசுந்தரம் ஆகியோர் நேர்காணல் நடத்தினர்.

Advertisement