இங்கு போட்டியிட மோடிக்கு தைரியம் இருக்கா? காங்கிரஸ் கேள்வி

606

நடக்க இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமேதி தொகுதியுடன், வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார். உத்தரபிரதேச மாநிலம் அமேதியில் பா.ஜனதா சார்பில் மீண்டும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி களமிறங்கியுள்ளார். தோல்வி காரணமாகவே அமேதியை விட்டு ராகுல் காந்தி வெளியேறியுள்ளார் என பா.ஜனதா விமர்சனம் செய்கிறது.

இந்நிலையில் கேரளா, தமிழகத்தில் போட்டியிட பிரதமர் மோடிக்கு தைரியம் உள்ளதா? என காங்கிரஸ் கேள்வியை எழுப்பியுள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாதுகாப்பான தொகுதியை நோக்கி ஓடுகிறார் என பா.ஜனதா கூறுவதை விமர்சனம் செய்துள்ள காங்கிரஸ் தலைவர் சசி தரூர், வயநாடு தொகுதியில் போட்டி தொடர்பாக ராகுல் காந்தி எடுத்த முடிவு அவரால் வட இந்தியாவிலும், தென்னிந்தியாவில் வெற்றிப்பெற முடியும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.

தென்னிந்தியாவில் போட்டியிடும் தலைவர் பிரதமராக வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பும் மக்கள் மத்தியில் உள்ளது. பிரதமர் மோடிக்கு தமிழகம் மற்றும் கேரளாவில் போட்டியிட தைரியம் உள்ளதா? என கேள்வியை எழுப்பியுள்ளார்.

Advertisement

1
Leave a Reply

avatar
1 Comment threads
0 Thread replies
0 Followers
 
Most reacted comment
Hottest comment thread
1 Comment authors
சந்திரா Recent comment authors
  Subscribe  
newest oldest most voted
Notify of
சந்திரா
Guest
சந்திரா

காங்கிரஸ் கட்சிக்கு நாவில் சனி
என்று நினைக்கிறேன்…