இந்த ஆண்டு நீட் தேர்வு நடக்குமா? நடக்காதா?

220

இந்தாண்டு நீட் தேர்வு நடக்குமா? நடக்காதா என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்ல முடிவை அறிவிப்பார் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

நிலுவையில் உள்ள முல்லைப் பெரியாறு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நேரடி விசாரணை தொடங்கிய பிறகு தமிழக அரசு சார்பில் வாதாடி நல்ல தீர்வு காணப்படும் என தெரிவித்தார்.

தமிழக மாணவர்களுக்கு இந்த ஆண்டு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கு தமிழக அரசு முயற்சி செய்யுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ரகுபதி, இது குறித்து முதலமைச்சர் முடிவெடுத்து நல்ல முடிவை அறிவிப்பார் என தெரிவித்தார். பேரறிவாளர் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பான மனு குடியரசுத் தலைவரிடம் நிலுவையில் உள்ளதாக கூறிய அமைச்சர் ரகுபதி, ஒட்டுமொத்த தமிழர்களின் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்ல தீர்வு காண்பார் என தெரிவித்தார். 

Advertisement