ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டாவது நடக்குமா ?

3313

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் நடைபெற இருந்த அனைத்து விளையாட்டு போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு நடைபெற இருந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் அடுத்து ஆண்டு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்  இதுகுறித்து பேசிய டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான சி.இ.ஓ தோசிரோ முடோ, கொரோனா வைரஸ் தொற்றை அடுத்த ஆண்டு ஜூலை மாத்திற்குள் முற்றிலுமாக கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்று யாராலும் உறுதியாக கூற முடியாது என்றார்.

உறுதியான பதில் இல்லாததால், போட்டியை ஓர் ஆண்டுக்கு ஒத்தி வைத்துள்ளதாகவும், ஆனால் அடுத்த ஆண்டும் போட்டி நடைபெறுமா என்பதை உறுதியாக கூற முடியாது என தெரிவித்தார்.

Advertisement