பேருந்தில் மதுபாட்டில்கள் கடத்தல்..!

120

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே அரசு பேருந்தில் மது பாட்டில்கள் கடத்திய நடத்துனர் மற்றும் ஓட்டுனர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட அரசு பேருந்தினை கீழ்புத்துப்பட்டு பகுதியில் உள்ள மதுவிலக்கு சோதனைச் சாவடியில் போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது பேருந்தின் பின்புறம் உள்ள பயணிகள் இருக்கையின் அடியில் டிராவல்ஸ் பேக்கில் 182 பிராந்தி பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து ஓட்டுநர் வெங்கடேசன் மற்றும் நடத்துனர் பாலாஜி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.