அதிகாரிகளின் துணையோடு பல கோடி மதிப்பிலான மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது – பொதுமக்கள் குற்றச்சாட்டு

188
Sand Robbery

திருவள்ளூர் அருகே ஏரியில் அதிகாரிகளின் துணையோடு பல கோடி மதிப்பிலான மணல் கொள்ளை நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆவடி அடுத்த கண்ணப்பாளையம் ஊராட்சியில் தூம்பல் ஏரி, மங்கம்மா ஏரி, தாங்கள் ஏரி ஆகிய மூன்று ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளின் நீராதாரத்தை வைத்து விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.

மேலும் அந்த ஏரியில் கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் மணல் அதிக அளவில் காணப்படுகின்றன. இதனை அறிந்த மணல் கொள்ளையர்கள் இரவு நேரங்களில் ஜேசிபி மூலம் லாரியில் கொள்ளை அடித்து விற்பனை செய்து வருகின்றனர்.

சென்னை உள்ளிட்ட பகுதியில் மணல் தட்டுப்பாடு உள்ள நிலையில் கண்ணப்பாளையம் ஏரியில் பல கோடி மதிப்பிலான மணல் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளதாகவும், மணல் கொள்ளையால் தங்கள் பகுதயில் கனிம வளமும், நீர் வளமும் குறைந்து  வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதற்கு காவல்துறையும், வருவாய்துறையும் உடந்தையாக செயல்படுவதாக குற்றம்சாட்டிய பொதுமக்கள், ரவுடிகள் துணையுடன் மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.