திரைப்பட திருட்டு மற்றும் காப்புரிமை சட்ட திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. 

111

திரையரங்குகளில் வெளியாகும் புதிய படங்கள் உடனே பதிவு செய்யப்பட்டு, இணைய தளங்களில் வெளியாவது தொடர்கதையாக உள்ளது. இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திரைத்துறையினர் கோரிக்கை விடுத்த வருகின்றனர்.

இந்நிலையில் திரைப்பட திருட்டு மற்றும் காப்புரிமை சட்ட திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, திரைப்படங்களை அனுமதியின்றி பதிவு செய்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும்,10 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் அவர், கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் சிட்பண்ட் மோசடி தொடர்பாக 166 வழக்குகளை சி.பி.ஐ பதிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.