500அடி உயரத்தில் இருந்து விழுந்த பெண் : பரிதாப உயிரிழப்பு

581

அமெரிக்காவின் அரிசோனா பகுதியை சேர்ந்த 23 வயது பெண் டேனிலி பர்னெட்.

இவர் மலையேறும் பழக்கம் கொண்ட பெண்ணாக இருந்துள்ளார்.இவர் பொழுதுபோக்காகவும்,ஆர்வம் காரணமாகவும் மலையேறும் செயலான ட்ரெக்கிங்கில் அடிக்கடி ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் யோஸ்மைட் தேசிய பூங்காவில் மலையான தி ஹாஃப் டோம் என்ற மலையின் மீது ஏறியுள்ளார்.இந்த மலை சுமார் 4,800 அடி உயரம் கொண்டதாம்.

இதன் மீது உரிய பாதுகாப்பு கயிறுகள் மற்றும் ஆவணங்களுடன் மலையேறிய போதிலும் டேனிலி தவறி விழுந்துள்ளார்.இதனையடுத்து பூங்காவின் அதிகாரிகள் விரைந்து சென்று மீட்க முயன்றுள்ளனர்.

ஆனால் விழுந்த அதிர்ச்சியில் டேனிலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இது தொடர்பாக பூங்கா அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் டேனிலி சுமார் 500 அடி உயரத்தில் இருந்து விழுந்திருப்பது தெரியவந்துள்ளது.