கள்ளக்காதல் மோகம்! குழந்தையின் கழுத்தை நெறித்துக்கொன்ற பெண்! இன்னொரு அபிராமியா?

1579

வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்த தாஜ்புரா மந்தவெளியைச் சேர்ந்த தீபிகா என்ற இளம்பெண், உறங்கிக் கொண்டிருந்த தனது காதல் கணவர் ராஜாவை தலையில் கல்லைப் போட்டும், குழந்தை பிரனீஷைக் கழுத்தை நெரித்தும் கொலை செய்தததாக கைது செய்யப்பட்டார்.

அன்றாடம் மது அருந்தி விட்டு தன்னைக் கொடுமைப்படுத்தியதால் கணவரைக் கொன்றதாகவும், கொலைகாரியின் மகன் என்று ஊர் பேசக் கூடாது என்பதற்காக குழந்தையையும் கொன்றதாக போலீசிடம் தீபிகா தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
வீட்டின் அருகே உள்ள ஓடையில் புதைக்கப்பட்ட சடலங்களை போலீசார் மீட்டனர்.

இருப்பினும் தீபிகா மட்டுமே இதைச் செய்திருக்க வாய்ப்பில்லை என்று சந்தேகித்த போலீசார் விசாரணையை மேலும் தீவிரப்படுத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. தகாத உறவே கொலைக்குக் காரணம் என்று தற்போது போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

குடிவெறியில் தீபிகாவிடம் ராஜா சண்டையிடும் போதெல்லாம், அவரது நண்பர் தாஜ்புரா சத்யா நகரைச் சேர்ந்த ஆட்டோ ராஜ் என்ற ஜெயராஜ் பிரச்சனையை தீர்த்து வைத்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதன் மூலம், தீபிகாவுடன், ஜெயராஜூக்கு நெருக்கம் அதிகரித்து தகாத உறவு ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான், திட்டமிட்டப்படி, கணவனையும், குழந்தையையும் கொலை செய்து விட்டு, ஜெயராஜ் மூலம் சடலங்களை அப்புறப்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை அடுத்து ஜெயராஜையும் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஜெயராஜிடம் மேற்கொண்ட விசாரணையில், ராஜாவையும், குழந்தையையும் கொலை செய்ய ஏற்கெனவே இருவரும் சேர்ந்து திட்டம் போட்டதாக கூறப்படுகிறது.

ஆனால், தீபிகா கொலைத் திட்டத்தை அரங்கேற்றப் போவது தனக்கே தெரியாது என்றும், கொலை செய்த பின்னர் தான் தன்னிடம் சொன்னதாகவும் ஜெயராஜ் கூறியதாக போலீஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொலையை மறைத்து விட்டு ஜெயராஜிடம் சேர்ந்து வாழ்வதற்கு தீபிகா திட்டம் போட்டதும் அம்பலமாகி உள்ளதாக சொல்லப்படுகிறது.

Advertisement