குடியரசு தின ஒத்திகையின் போது, “பாகிஸ்தான் வாழ்க” என்று முழக்கமிட்ட பெண் கைது

504

டெல்லியில், குடியரசு தின ஒத்திகையின் போது, “பாகிஸ்தான் வாழ்க” என்று முழக்கமிட்ட பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

டெல்லி, இந்தியா கேட் பகுதியில் குடியரசு தின விழாவிற்கான ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அப்போது, பலத்த பாதுகாப்பையும் மீறி அந்த பகுதிக்கு வந்த பெண் ஒருவர், “பாகிஸ்தான் வாழ்க” என முழக்கமிட்டார். இதனால் ஒத்திகை நிகழ்ச்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, பெண்ணை கைது செய்த போலீசார், அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதனையடுத்து, கூட்டத்தில் முழக்கமிட்ட பெண், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது விசாரணையில் தெரிய வந்தது. பின்னர், போலீசார் அவரை மனநல காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.