“திருமணமாகி 2 நாட்கள் தான்..” ரூ.5 லட்சம் கடன்..! மனைவியை நண்பனுக்கு விற்க முயன்ற கணவன்..!

572

கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் முஸ்தாக். இவருக்கும், 27 வயது நிரம்பிய பெண் ஒருவருக்கும் கடந்த ஆண்டு ஜுலை மாதம் திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் திருமணமான இரண்டே நாட்களில் முதலிரவே நடக்காத நிலையில் முஸ்தாக் தனது மனைவியை அழைத்துக் கொண்டு தன்னுடைய நண்பனின் வீட்டுக்கு சென்றிருக்கிறார்.

நண்பனின் வீட்டில் யாரும் இல்லை என்று கூறப்படுகிறது. அப்போது, தான் 5 லட்ச ரூபாய் கடன் பெற்றுள்ளதாகவும், அதனை அடைப்பதற்காக நீ தனது நண்பனுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். இதற்கு அந்த மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் கடும் கோபம் அடைந்த முஸ்தாக், தனது மனைவியை சரமாரியாக அடித்து துன்புறுத்தி வந்திருக்கிறார். இதையடுத்து அந்த பெண், தனது கணவரிடம் இருந்து தப்பித்து பெற்றோரிடம் சென்றிருக்கிறார். அங்கு சிறிது காலம் இருந்த நிலையில், மீண்டும் முஸ்தாக் தனது மனைவிக்கு செல்போனில் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண், அங்குள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், முஸ்தாக்கை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ரூ.5 லட்சம் கடனுக்காக மனைவியை தனது நண்பனுக்கு விருந்தாக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of