3 குழந்தைகளுக்கு வி‌ஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி!

89

அயனாவரம் கெல்லீஸ் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மனைவி திவ்யா. கருத்துவேறுபாடு காரணமாக மனைவி குழந்தைகளை பிரிந்து சென்ற வெங்கடேஷ் ஒருவருடத்துக்கு முன்பு இறந்துவிட்டார்.இந்தநிலையில் திவ்யாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவர் திவ்யா வீட்டுக்கு வந்து சென்றார். இதை பக்கத்து வீட்டு பெண்கள் தவறாக பேசினார்கள். திவ்யாவின் நடத்தையில் சந்தேகப்பட்டனர்.

இதனால் மனவருத்தம் அடைந்த திவ்யா நேற்று இரவு பாலில் எலிமருந்து கலந்து குடித்தார். தனது குழந்தைகள் விக்னேஷ், அபிநயா மற்றும் செந்தமிழ் ஆகியோருக்கும் கொடுத்தார். வயிறு மற்றும் தொண்டை எரிந்ததால் நள்ளிரவு 12 மணியளவில் குழந்தைகள் அலற தொடங்கினர்.

உடனே அங்கு திரண்ட அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தலைமை செயலக காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்தார். பக்கத்து வீடுகளை சேர்ந்த 3 பெண்களிடம் விசாரணை நடத்தினார்