குடும்பக் கட்டுபாடு செய்த பெண் மீண்டும் கர்ப்பம்! குடும்பத்தினர் அதிர்ச்சி

500

அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த ஷிபா என்பவர் தாக்கல் செய்த மனுவில் கடந்த செப். 4-ம் தேதி நெல்லை அரசு மருத்துவமனையில் குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை செய்து கொண்டதாகவும் ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன் தான் கர்ப்பமானதாகவும் கூறியுள்ளார்.

தனக்கு குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை செய்த மருத்துவக் குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு 20 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு தர வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார் தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் நெல்லை அரசு மருத்துவமனை முதல்வர் அம்மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதில் அளிக்க நீதிபதி உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

Advertisement