பெண்களுக்கு பாலியல் தொல்லை அதிகரிப்பு…, விரேந்திர குமார் அதிர்ச்சி தகவல்

598

நாடாளுமன்றத்தின் நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் நேற்று நடைபெற்ற விவாதத்தின்போது குழந்தைகள் மற்றம் பெண்கள் மேம்பாட்டு துறை இணை அமைச்சர் விரேந்திர குமார் பேசினார்.

அப்போது அவர், பணியிடங்களில் பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல்கள் குறித்து 965 குற்றச்சாட்டுகள் தேசிய குற்ற ஆவண காப்பகத்தில் பதியப்பட்டுள்ள தகவலை, குழந்தைகள் மற்றம் பெண்கள் மேம்பாட்டு துறை இணை அமைச்சர் விரேந்திர குமார் மக்களவையில் உறுதி செய்துள்ளார்.

ஆணாதிக்கம் அதிகம் உள்ள இந்தியாவில், பணியிடங்களில் பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன என பேசிய அவர், தேசிய குற்ற ஆவண காப்பகம் மூலம் வெளியாகியுள்ள தகவல், பெண்களை உளவியல் ரீதியாக வலுவிழக்க செய்துள்ளது என வேதனை தெரிவித்தார்.

கடந்த 2016-ல் 539 குற்றச்சாட்டுகளும், 2017-ம் ஆண்டில் 570 குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளதைவிட கடந்த ஆண்டு அதிகமாக பதிவாகியுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

இதுகுறித்து, பெண்களின் மீதான பாலியல் அத்துமீறல்களை குறைக்கும் வகையில் பணியிடங்களில் விழிப்புணர்வு நிகழ்வுகளை சீரான இடைவேளையில் நடந்திட மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் அறிவுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Advertisement