நெல்லையில் மனைவி மற்றும் மாமியார் விஷம் குடித்து தற்கொலை!

234

கணவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதால் வேதனை அடைந்த மனைவி மற்றும் மாமியார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரப்பரபை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகேயுள்ள ஆத்துக்குறிச்சியை சேர்ந்த மாயராமன் – வைரமுத்து தம்பதிக்கு, 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.ஆனால் குழந்தை இல்லாததை காரணம் காட்டி, மாயராமன், தனது மனைவி வைரமுத்துவின் சொத்துக்களை எழுதிவாங்கியுள்ளார். மேலும், கடந்த 28 ஆம் தேதி உடன்குடியைச் சேர்ந்த ஒரு பெண்ணை அவர் 2வது திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ராதாபுரம் காவல்நிலையத்திலும், நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மனமுடைந்த வைரமுத்துவும், அவரது தாயார் பொன்னம்மாளும் நேற்றிரவு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

தகவலறிந்து வந்த போலீசார், சடலங்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.