கட்டிலில் கட்டி வைத்து பெண் எரித்து கொலை..! – உ.பி-யில் தொடரும் கொடூர கொலைகள்..!

769

பெண் ஒருவரை அப்படியே கட்டிலில் கட்டி வைத்து உயிரோடு எரித்த சம்பவம் பேரதிர்ச்சியை தந்துள்ளது.

வன்முறை தாண்டவமாடும் மாநிலங்களில் முதன்மையாக திகழ்ந்து வருகிறது உத்திர பிரதேசம்.. நாளுக்கு நாள் கொலைகளும், பாலியல் அக்கிரமங்களும் இங்கு அரங்கேறி வருவது கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

உத்தரபிரதேச மாநிலம் பிஜோனூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் பெண் ஒருவர் பிணமாக கிடந்தார்.. மிகவும் கோரமாக கொல்லப்பட்டுள்ளார் அந்த பெண்.. எரிந்த நிலையில், ஒரு ஆழ்துளை கிணற்றுக்கு அருகில் அந்த பெண்ணின் பிணம் கிடந்தது.

கட்டிலில் கயிற்றால் கட்டப்பட்டுதான் பெண்ணை எரித்துள்ளனர்.. அதனால், உயிரோடு எரித்துக் கொன்று இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
மேலும் கொலை நடந்த இடத்தில் துப்பாக்கி குண்டுகளும் சிதறி கிடந்தன. அதனால் அவரை துப்பாக்கியால் சுட்டு கொன்று அதன்பின்பு எரித்தார்களா என்றும் தெரியவில்லை.. அந்த பெண் யார்? எதற்காக கொல்லப்பட்டார் என்பதும் உடனடியாக தெரியவில்லை.

சடலம் மொத்தமாக எரிந்து கிடப்பதால், அவரை பலாத்காரம் செய்து கொன்றிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.. சடலத்தை போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.. அந்த ரிப்போர்ட் வந்தால்தான் எதுவும் உறுதியாக சொல்ல முடியும் என்கிறது போலீஸ் தரப்பு.

துப்பாக்கியால் சுட்டு கொன்றார்களா, பலாத்காரம் செய்து கொன்றார்களா, கட்டிலில் உயிரோடு கொளுத்தி கொன்றார்களா போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

இது சம்பந்தமாக உயர் போலீஸ் அதிகாரி லட்சுமி நிவாஸ் மிஸ்ரா சொல்லும்போது, “அந்த பெண்ணின் அடையாளம் முதலில் தெரிய வேண்டும்.. அதற்காக அவரது டிஎன்ஏ மாதிரிகளை சேகரித்து வருகிறோம்… அடையாளம் தெரிந்தால்தான் எதற்காக கொல்லப்பட்டார் என்ற விவரமும் தெரியவரும்.. அததற்கு பிறகுதான் கைது நடவடிக்கை இருக்கும்” என்றார்.

இளம்பெண் கட்டிலில் கட்டி உயிருடன் எரித்து கொல்லப்பட்ட சம்பவம் அந்த சுற்றுவட்டாரத்திலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பெண் யாரென்ற தெரியாத நிலையில், இதேபோல இதே உபி மாநிலம், பக்ராரிச் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இன்னொரு பெண்ணும் கொடூரமாக கொல்லப்பட்டார்.

அவரது உடல், முகம், உடம்பெல்லாம் ஆசிட் வீசப்பட்டு இருந்தது. இந்த பெண்ணின் அடையாளமும் தெரியவில்லை.. அந்த அளவுக்கு முகம் சிதைந்து கிடந்தது. இது சம்பந்தமாகவும் விசாரணை நடந்து வருகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of