சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்

422

சபரிமலைக்கு வந்த இரு பெண்களைத் திரும்பிச் செல்ல கேரள அரசு உத்தரவிட்ட நிலையில் அவர்கள் இருவரும் திரும்பிச் செல்ல முடிவு செய்தனர். அவர்களை போலீஸார் பாதுகாப்புடன் திரும்ப அழைத்துச் சென்றனர். ஆந்திராவைச் சேர்ந்த கவிதா என்ற பெண் பத்திரிகையாளரும், எர்ணாகுளத்தைச் சேர்ந்த ரெஹனா பாத்திமா என்ற பெண் செயல்பாட்டாளரும் சபரிமலைக்கு வந்தனர். இருவரும் ஹெல்மட் அணிந்து, போலீஸ் சீருடை போன்ற உடையில் வந்தனர்.

இருவருக்கும் கிட்டத்தட்ட 200 போலீஸார் பாதுகாப்புக் கொடுத்து, அழைத்து வந்தனர். பம்பையிலிருந்து இவர்கள் சன்னிதானம் வந்தனர். நடைப்பந்தல் வரை வந்து விட்ட இவர்கள் அங்கிருந்து 10 நிமிட தூரத்தில் உள்ள 18ம் படியை அடைந்து கோவிலுக்குச் செல்ல வேண்டும். ஆனால் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிலுக்கு முன்பு கூடி அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இரு பெண்களையும் அனுமதிக்க முடியாது என்று கூறியதால் பரபரப்பு ஏற்ப்பட்டது.

போராட்டகாரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏதும் ஏற்ப்படாத்தால், இரு பெண்களையும் அருகே உள்ள வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்து ஐஜி ஸ்ரீஜித் பேச்சுவார்த்தை நடத்தினார். போராட்டக்காரர்கள் பிடிவாதமாக இருப்பதாகவும், சபரிமலை சன்னிதானத்திற்குள் பக்தர்களைத் தவிர மற்றவர்களை அனுமதிக்க இயலாத நிலை இருப்பதையும் இரு பெண்களிடம் விவரித்தையடுத்து இரு பெண்களும் தாங்கள் திரும்பிச் செல்வதாக தெரிவித்தனர். தாங்கள் பத்திரமாக போய்ச் சேரும் வரை பாதுகாப்பு அளிக்கவும் அவர்கள் கேட்டுக் கொண்டனர். அதற்கு ஐஜி உத்தரவாதம் அளித்தபின் இருவரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அங்கிருந்து கிளம்பினர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of