அனுமதி இன்றி டிரக்கிங் சென்ற பெண் – காட்டுயானையால் நேர்ந்த சோகம்

311

பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட பாலமலை வனப்பகுதிக்கு 8 பேர் கொண்ட குழு ஒன்று டிரக்கிங் சென்றுள்ளனர். முறையான அனுமதி எதுவும் இன்றி இவர்கள் டிரக்கிங் சென்றதாக கூறப்படும் நிலையில், இவர்களுக்கு எதிரே காட்டுயானை ஒன்று வந்துள்ளது.

இந்நிலையில் காட்டுயானையை கண்டவுடன் உடனிருந்தவர்கள் தப்பியோடினர். உடனிருந்தவர்கள் தப்பியோடிய நிலையில் பெண் ஒருவர் மட்டும் காட்டுயானையிடம் சிக்கி கொண்டார். இந்நிலையில் தனியாக சிக்கிய பெண்ணை காட்டுயானை மிதித்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து வனத்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் உயிரிழந்த பெண் புவனேஸ்வரி என்பவர் தனியார் கண் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார் என்பதும் இவர் தனது கணவர் மற்றும் நண்பர்களுடன் அனுமதியின்றி இப்பகுதியில் டிரக்கிங் செல்வதை வாடிக்கையாக வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து சடலத்தை கைப்பற்றிய போலீசார், அதனை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து கூறும் அப்பகுதியினர், வேட்டைத்தடுப்பு காவலர்கள் சரிவர பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவதில்லை என்றும் வனத்துறையினரின் அலட்சியமே அனுமதியின்றி அவர்கள் டிரக்கிங் செல்ல காரணம் என குற்றம்சாட்டுகின்றனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of