முத்தலாக் கூறிய கணவர்..! புகார் கூறிய மனைவிக்கு நேர்ந்த கொடூரம்..!

678

முத்தலாக் தடை மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், பல்வேறு எதிர்ப்புகளுக்கு பின் நிறைவேறியது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, அரசானையும் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், அவரது மனைவியிடம் தலாக் என்று 3 முறை கூறி விவாகரத்து செய்துவிட்டதாக கூறியுள்ளார். இதனையடுத்து போலீசார் முத்தலாக் சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வழக்குப்பதிவு செய்யப்பட்டதையடுத்து, கணவரின் உறவினர் அந்த பெண்ணை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு கணவரின் உறவினர்களால் அவரது மூக்கு அறுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.