ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக பெண்கள் ஓப்பாரி வைத்து போராட்டம்…!

509

மத்திய அரசு திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசல் ஊராட்சியை மையமாக கொண்டு ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு போராட்டங்களின் தொடர்ச்சியாக திருக்காரவாசல் கடைவீதியில் நேற்று முன் தினம் முதல் கிராம மக்கள் மத்திய அரசிற்கு கண்டனம் தெரிவித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த காத்திருப்பு போராட்டத்தில் நாகை சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி பங்கேற்றார். போராட்டத்தின் போது பெண்கள் ஓப்பாரி வைத்து ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய  தமிமுன் அன்சாரி  ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதிக்க கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும் என்றார்.

Advertisement