புதூர் காடம்பட்டி பகுதியை சேர்ந்த விமல்ராஜ் என்பவர், தாரமங்கலம் தேர்முட்டி என்ற இடத்தில் வெள்ளி கடையை நடத்தி வருகிறார்.இவரது மனைவி ராதா நேற்று கடையிலிருந்தபோது கொலுசு வாங்குவது போன்று 5 பெண்கள் வந்துள்ளனர்.
அவர்கள் ராதாவின் கவனத்தை திசை திருப்பி, விற்பனைக்கு வைத்திருந்த சுமார் இரண்டே முக்கால் கிலோ வெள்ளியை திருடி சென்றுள்ளனர்.
இவற்றின் மதிப்பு 1 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் என கடை உரிமையாளர் விமல்ராஜ் தெரிவித்துள்ளார்.
இது குறித்த சிசிடிவி பதிவை கொண்டு போலீசார், வெள்ளியை திருடி சென்ற பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.