மகள் கண்முன்னே தாய் செய்த காரியம்! உயிரிழந்த கணவன்!

867

நிர்மல் ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ) என்பவருக்கு கடந்த 2006-ஆம் ஆண்டு சிங்கப்பூரில் வேலை கிடைத்தது. இதனால் தனது மனைவி மற்றும் மகளை விட்டுவிட்டு, சிங்கப்பூருக்கு சென்றுள்ளார்.

இருவருக்கும் வீசா கிடைத்த பின்னர் இருவரையும், அங்கு வரவழைத்துள்ளார். இந்நிலையில் கணவன் தினமும் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு மிகவும் தாமதமாக வந்துள்ளார். இதனால் மிகவும் கோபம் அடைந்த அவரது மனைவி இரவு தாமதமாக வருவதற்கு காரணம் என்ன என்று கேட்டு சண்டை பேட்டுள்ளார்.

இவ்வாறு இருவருக்கும் அடிக்கடி கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நிர்மல் ( பெயர் மாற்றப்பட்டுள்ளது) அவரது மனைவியிடம் நாம் பிரிந்து விடலாம் என்று தெரிவித்துள்ளார். இதனால் கடும் கோபம் அடைந்த அவர், தன் கணவனை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

அதிகாலை 5 மணி அளவில், பெற்றோர் அறையிலிருந்து, தன் அப்பாவின் அலறல் சத்தம் கேட்ட மகள் உடனே ஓடிச்சென்று பார்த்தார். அப்போது தன் மகள் கண்முன்னே, கணவனை கத்தியால் குத்திக்கொலை செய்துவிட்டு, தானும் கையில் அறுத்துக்கொண்டுள்ளார்.

இதைப்பார்த்த நிர்மலின் மகள், போனில் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உயிருக்கு போராடிய நிர்மலின் மனைவியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of