ராணுவம் தங்கியிருந்த இடத்தை தோண்டிய போது கிடைத்த பெண்களின் உடைகள்..! அதிர்ச்சி தகவல்..!

1850

இலங்கையின் யாழ்ப்பாணத்தில் ராணுவம் தங்கியிருந்த இடத்தை தோண்டிய போது, மனித எலும்புக்கூடுகளும் பெண்களின் ஆடைகளும் கிடைத்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த இடத்தை தற்போது போலீசார் சுற்றி வளைத்து சோதனை செய்து வருகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் பண்ணை மீனாட்சி அம்மன் ஆலய வீதியில், தனியாருக்கு சொந்தமான பகுதியொன்றில், கொட்டகை அமைப்பதற்காக நிலத்தை தோண்டியுள்ளனர்.

அப்போது, அந்த இடத்தில் இருந்து மனித எலும்புக்கூடுகள், மண்டையோடுகள் கண்டெடுக்கப்பட்டன. அதுமட்டும் இல்லாமல், பெண்களின் ஆடைகளும் மனித எச்சங்களுடன் கண்டறியப்பட்டதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலம் உள்ளிட்ட பகுதிகள், கடந்த 2006-ம் ஆண்டு வரை இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கத்து. இந்தப் பகுதியில் பெண்களின் ஆடைகளுடன் மண்டையோடுகளும் எலும்புக்கூடுகளும் கிடைத்ததால், பெண்களைக் கொன்று புதைத்துள்ளனரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தத் தகவல் பரவியவுடன், அந்த இடத்தை சுற்றி வளைத்த போலீசார், தற்போது பல தரப்பு விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேபோன்று, மன்னார் உள்ளிட்ட தமிழர் செறிவாக வசிக்கும் பகுதிகளில், முன்பு ராணுவம் தங்கியிருந்த இடங்களில் தோண்டும் போது, மனித எலும்புக்கூடுகள் கிடைத்த நிலையில், தற்போது யாழ்ப்பாணத்திலும் எலும்புக்கூடுகள் கிடைத்திருப்பது பல்வேறு கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்புகின்றன.