இது உண்மையான மகளிர் தினம் இல்லையா?

397

பெண், அவள் உருவாக்குபவள், அவள் உயிர் காப்பவள், அவள் ஒரு ஆச்சரியக்குறி. அவள் முதுகில் எப்போதும், உயர்ந்து நிற்கிறது கேள்விக்குறி.
தாயாக உயிர் தருகிறாள், மனைவியாக மீண்டும் உயிர் பெறுகிறாள்.

இவள் இல்லாத உலகத்தில் நிச்சயம் பூக்கள் பூக்காது என்றும், அப்படி பூக்கள் பூத்தாளும் அது தேனை கொடுக்காது என்றும் கவிஞர்கள் பாடி வருகின்றனர்.
பெண்ணின் சிறப்பு குறித்து விவரிக்க இவ்வுலகில் வார்த்தைகளே இல்லை என்றும் சிலாகிக்கின்றனர் கவிஞர்கள்.

இப்படி பல்வேறு பரிணாமங்களை பெற்ற பெண்ணின் சிறப்பு விவரிக்க இயலாது, என்றும் சொல்லப்படுகிறது. சர்வதேச மகளீர் தினமான இன்று, பெண்களின் சிறப்புக் குறித்த சிறு துளியையும், மகளீர் தினத்தின் வரலாறு குறித்தும் தற்போது காண்போம்.

பெண்களுக்கு சம உரிமையை வழங்க வேண்டும் என்று 1789 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி, பாரிசில் உள்ள பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர்.
அப்போது தான் இந்த உலகிற்கு தெரிந்தது, பூக்களும் புயலாக மாற முடியும் என்று.

இவர்களின் இந்த போராட்டம் தொடங்கிய சில வருடங்களிலேயே, உலக நாடுகள் முழுவதும் பெண் சுதந்திரம் மற்றும் சமஉரிமை குறித்து விழிப்புணர்வு பரவ ஆரம்பித்தது.

இவ்வாறு உலகம் முழுவதும் தொடங்கிய இந்த போராட்டம், 1848 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் நாள் முடிவுக்கு வந்தது. அதுவே உலக மகளீர் தினம்.
உலகம் இன்றும் உயிர் கொண்டுள்ளது என்றால், அதற்கு பெண்ணே காரணம். இன்றும் இங்கு அன்பு நிறைந்திருக்கிறது என்றால், அதற்கும் பெண்ணே காரணம் என்று காலம் காலமாக சொல்லப்பட்டு வந்தாலும்…..

உலகமே இவர்களால் இயங்கினாலும், இவர்களுக்கு எதிரான வன்முறை இன்றும் இங்கு இருந்து கொண்டு தான் இருக்கிறது என்பது தான் வேதனை. அதோடு அவர்களின் கரங்களில் குருதி சிதறிக் கொண்டு தான் இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

இப்படி தொடர்ச்சியாக தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு, வரும் நிலையில், பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள் எப்போது நிறுத்தப்படுகிறதோ அப்போது தான் உண்மையான உலக மகளீர் தினம் என்று சம உரிமை வேண்டும் பெண் போராளிகள் போராடி வருகின்றனர்.

அதற்கு ஆண்களும் பங்களிக்க வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கையாக உள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of