மாதவிடாய் – பெண்களே கவலை வேண்டாம்… வந்துவிட்டது இயற்கை நாப்கின்

903

இவ்வுலகில் ஆண்களை காட்டிலும் பெண்கள் உடல் ரீதியாக பல இன்னல்களை சந்தித்து வருகிறார்கள், இருப்பினும் ஆண்களுக்கு இணையாக பல துறைகளில் பெண்கள் தொடர்ச்சியாக சாதனைகளை நிகழ்த்தி கொண்டிருக்கிறார்கள்.

பெண்கள் சந்திக்கும் இன்னல்களில் முக்கியமான ஒன்று மாதவிடாய் காலம். இது வார்த்தைகளால் விளக்க முடியாக வலிகளை கொண்டது.

ஒரு காலத்தில் மாதவிடாய் காலங்களில் பெண்களை வீட்டிலேயே முடக்கி வைக்கும் நிலை மாறி, பின்னர் அது தொடர்பான விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு, தற்போது மாதவிடாய் நேரங்களில் கடைகளில் கிடைக்கும் சானிடரி நாப்கினை பெண்கள் பெரும்பாலும் பயன்படுத்திவருகின்றனர்.

இதுவரையில் பயன்படுத்தபட்டுவரும் வழக்கமான நாப்கின்கள் பிளாஸ்டிக் மூலம் கிடைக்கும் பாலிபுரொப்பிலைனால் உருவான ஹைட்ரோபோபிக் தாளால் சுற்றப்பட்டிருக்கும். அதன்மூலம் உடல் அரிப்புகள் ஏற்பட்டு பக்க விளைவுகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது என கூறுகின்றனர்.

இதற்காக மாற்றாக வேம்பு,எலுமிச்சை, மஞ்சள், என முற்றிலும் இயற்க்கை பொருட்களால் ஆன நாப்கின்களை சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி ப்ரீத்தி கண்டறிந்துள்ளார்.

முழுக்க இயற்க்கை பொருட்களால் தயாரிக்கப்பட்ட இந்த நாப்கின்கள் செல்லுலோஸை அடிப்படையாகக் கொண்டவை என்பதாலும், இது மஞ்சள், வேம்பு, வெட்டிவேர் மற்றும் எலுமிச்சை ஆகியவற்றின் சாறுகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டது என்பதாலும், பெண்களுக்குப் பாக்டீரியா நோய்த்தொற்றை ஏற்படுத்தும் நோய்க்கிருமிகளுக்கு எதிராகவும் இது செயலாற்றுகிறது என கூறுகிறார் மாணவி ப்ரீத்தி.

மிகவும் மெலிதாக இருக்கும் இந்த நாப்கின், 3 மி.மீ. தடிமன் கொண்டது. தன்னுடைய எடையைக் காட்டிலும் 1,700% அதிக நீரை உறிஞ்சும் தன்மை கொண்டது என்றும், இதற்கு பல அறிவியல் பூர்வமான நன்மைகள் உண்டு எனவும் தெரிவிக்கப்படுகிறது.

தாவரங்களின் மூலம் கிடைக்கும் பாலிமர்கள் மற்றும் கார்போஹைட்ரேட்கள் இந்த நாப்கினில் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதால் 100 % இந்த நாப்கின்கள் இயற்க்கை பொருட்களால் உருவாக்க பட்டுள்ளது என்பதை மேலும் உறுதி படுத்துகிறது.

மாணவி ப்ரீத்தியின் இயற்க்கை நாப்கின் கண்டுபிடிப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது மட்டுமல்லாமல் பாராட்டுகளையும் பெற்றுருகிறது என்றால் அது மறுப்பதற்கு அல்ல…

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of