பெண்கள் ஹாக்கி போட்டிகள் – போராடி தோல்வியடைந்த இந்தியா

565

பெண்களுக்கான ஹாக்கி போட்டிகள் தற்போது நடைபெற்றுவருகிறது, இந்த போட்டிகளில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதின, இந்த போட்டியில் முதலில் நடந்த ஆட்டத்தில் இந்திய 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, ஆனால் அடுத்து ஆடிய இரண்டாவது ஆட்டத்தில் இந்திய அணி 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவியது.

இதனையடுத்து இந்த போட்டியின் மூன்றாவது ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் இந்தியா 0-1 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது. தொடக்கத்தில் நியூசிலாந்துக்கு இரண்டு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் நியூசிலாந்து வீராங்கனைகளை கோல் அடிக்க விடாமல் இந்தியா வீராங்கனைகள் சிறப்பாக தடுத்தனர்.

இருப்பினும் போட்டியின் 37-வது நிமிடத்தில் நியூசிலாந்து அணியின் ஹோப் ரால்ப் கோல் அடித்தார். இதனால் நியூசிலாந்து 1-0 என முன்னிலை பெற்றது. அதன் பின் ஆட்ட நேர முடிவு வரை எந்த கோலும் இந்தியா அடிக்காததால் இந்தியா 0-1 என தோல்வியடைந்தது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of