பெண்கள் தற்காப்புக் கலையை கற்றுக் கொள்ள முன்வர வேண்டும் | – வீடியோ உள்ளே

377

அமலா பால் நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன்பு ‘அதோ அந்த பறவை போல’ என்ற திரைப்படம் வினோத் கே.ஆர் இயக்கத்தில் தயாரானது, பல காரணங்களால் இந்த படம் தடை படவே தற்போது இந்த ஆண்டு இந்த படம் வெளியாகவுள்ளது. இன்று சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் இந்த படத்திற்கான செய்தியாளர் சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பில் பேசிய நடிகை அமலா பால், இயக்குநர் 2017 ல் இந்தப் படத்தின் கதையை என்னிடம் கூறினார். படத்தில் நடித்த அனுபவம் கடினமானவும், அதே சமயம் மகிழ்ச்சியாகவும் இருந்தது.

சிறிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள படம் இது. படத்தை வெளியிட படக்குழு படும் கஷ்டத்தை விட படத்தில் நடித்தது எனக்கு பெரிய கஷ்டமாக தோன்றவில்லை, இந்தப் படத்தின் முக்கிய அங்கமாக இருப்பதை நான் பெருமையாக நினைக்கிறேன். ஒரு பெண் காட்டுக்குள் மாட்டிக் கொள்வதும், அதிலிருந்து அவர் எப்படி தப்பி வருகிறார் என்பது தான் படத்தின் கதையாக.

ஆடை படம் வெளிவர நிறைய சிரமங்கள் இருந்தது. தணிக்கைச் சான்றிதழ் ‘ஏ ‘சான்றிதழாக இருந்ததால் பல வகை விமர்சனங்கள் வந்தது, நிறைய பேர் பார்க்கத் தயங்கினர். ஆனால் இந்தப் படத்தின் வெளியீட்டிற்கு சிரமங்கள் இல்லை, யு சான்றிதழ் பெற்றுள்ளதால் ரசிகர்களிடம் நல்ல விதமாக இந்தப் படம் பேசப்படும் என்றார்.

தற்காப்புக் கலை தெரிந்ததால் என்னால் இன்று தனியாக பயணம் செய்ய முடிகிறது, பெண்கள் தற்காப்புக் கலையை கற்றுக் கொள்ள முன்வர வேண்டும் என்று கூறினார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of