பெண்கள் பாதுகாப்பு தொடர்பான விதிமுறைகள் வெறும் ஆவணங்களில் மட்டுமே உள்ளது

591

நேர்மையான அதிகாரிகள் பணிமாற்றம் காரணமாக பாதிக்கப்படுவதாகவும், பெண்கள் பாதுகாப்பு தொடர்பான விதிமுறைகள் வெறும் ஆவணங்களில் மட்டுமே உள்ளதாக கர்நாடகா ஐஜி ரூபா தெரிவித்துள்ளார்.

கோவையில் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊழல் தொடர்பாக அரசியல் வாதிகளிடம் மக்கள் கேள்வி எழுப்ப வேண்டும் என தெரிவித்தார்.

சமூக மாற்றத்திற்கு நேர்மையான அதிகாரிகளின் பங்கு நிச்சயம் இருக்கும் என தெரிவித்த அவர், நேர்மையான அதிகாரிகளை அரசுகள் விரும்புவதில்லை என்றும் நேர்மையான அதிகாரிகள் பணிமாற்றம் காரணமாக பாதிக்கப்படுவதாக தெரிவித்தார்.

பரப்பன அக்ரஹார சிறையில் சிறை அதிகாரியாக தன்னுடைய பணியை மட்டுமே செய்ததாக தெரிவித்த ரூபா, அப்போது மன்னார்குடி மாஃபியாவால் ஆபத்து ஏற்படும் என பலர் தன்னை எச்சரித்ததாகவும், ஆனால் அதைபற்றி கவலைப்படாமல் பரப்பன ஆக்ரஹார சிறையில் நடந்ததை செயல்களை வெளிப்படுத்தியதாக தெரிவித்தார்.

Advertisement