திடக்கழிவுகளால் உருவாக்கிய உலக அதிசய பூங்கா!

608

டெல்லி மாநகராட்சியின் சார்பில் திடக்கழிவுகள் மற்றும் இதர பொருட்களை கொண்டு உலகின் 7 உலக அதிசயங்களின் மாதிரி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி நினைவகம் அருகே 7 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்ட இந்த பூங்காவில் இடம்பெற்றுள்ளன.20 அடி உயரத்தில் தாஜ்மஹால், 18 அடி உயரத்தில் எகிப்து நாட்டில் உள்ள கிஸா பிரமிடு, 60 அடி உயரத்தில் ஈபிள் கோபுரம், 25 அடி உயரத்தில் பைசா நகரத்தின் சாய்ந்த கோபுரம், 25 அடி உயரத்தில் ரியோ டி ஜெனெய்ரோ நகரில் உள்ள மீட்பர் இயேசுவின் சிலை, 15 அடி உயரத்தில் ரோம் நகரில் உள்ள கோலோசியம் அரங்கம், 30 அடி உயரத்தில் அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை ஆகியவை இங்கு அமைந்துள்ளன.சுமார் 7 கோடி ரூபாய் செலவில் ஆறே மாதங்களில் உருவாக்கப்பட்ட இந்த பூங்காவை மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of