கர்நாடகாவில் குமாரசாமிக்கும், எடியூரப்பாவுக்கும் இடையே முற்றும் வார்த்தை போர்

773

கர்நாடகாவில் முதலமைச்சர் குமாரசாமிக்கும், முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவுக்கும் இடையே வார்த்தை போர் வலுத்து வருகிறது.

பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் குமாரசாமி, காங்கிரஸ்,மதச்சார்பற்ற எம்எல்ஏக்களை இழுக்க பாஜகவினர் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர் என்றும், கூட்டணி ஆட்சியைக் கவிழ்க்க பாஜக தொடர் முயற்சியில் இறங்கியுள்ளது எனவும் குற்றஞ்சாட்டினார்.

ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டுவரும் பாஜகவுக்கு எதிராக மக்கள் கொதித்தெழுந்து போராட்டம் நடத்துமாறு தாமே அழைப்பு விடுப்பேன்என்றும், தமது அரசை கவிழ்க்க எடியூரப்பா வீணான முயற்சியில் ஈடுபட்டுள்ளார் எனவும், அவர் தெரிவித்தார்.

இதனிடையே, வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியுள்ள முதலமைச்சர் குமாரசாமி மீது தேச துரோக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என எடியூரப்பா கூறியுள்ளார்.

முதலமைச்சர் குமாரசாமி மற்றும் பாஜக மாநிலத் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடியூரப்பாவுக்கும் இடையிலான அரசியல் பிரச்சனை வார்த்தை போராக மாறி உள்ளது.

Advertisement