உருளைக்கிழங்குடன் கலந்து இருந்த முதலாம் உலகப்போரின் உருளைக்கிழங்கு வெடிகுண்டு!

813

ஹாங்காங்கிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்குகளுடன் முதலாம் உலகப்போரின் கையெறி வெடிகுண்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியதுஹாங்காங்கின் நியூ பிராந்தியத்தில் உள்ள சாய் குங் மாவட்டத்தில் தின்பண்டங்கள் செய்யும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு உருளைக்கிழங்கு சிப்ஸ் தயார் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது, ஒரு தொழிலாளியின் கையில் உருளைக்கிழங்கை போல் இருந்த மர்ம பொருள் ஒன்று சிக்கியது.

பின்னர் அதை ஆராய்ந்தபோது அது கையெறி குண்டு என்பது தெரியவந்தது. உடனடியாக போலீசார் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.

அவர்கள் அந்த கையெறி வெடிகுண்டை சோதனை செய்ததில் அது முதலாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்டது என்பது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் அந்த கையெறி வெடிகுண்டை பத்திரமாக செயலிழக்க செய்தனர்.

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of