உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி – இந்தியாவின் பிரணாய் அபாரம்

99

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவின் பிரணாய், 3வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஸ்விட்சர்லாந்தின் பேஸல் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 2ஆம் சுற்று போட்டியில், 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற சீனாவின் லின் டானை, இந்தியாவின் பிரணாய் எதிர்கொண்டார். இதில் முதல் செட்டை பிரணாயும், 2வது செட்டை லின்னும்  கைப்பற்றினர்.

இதனால் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது செட்டில் பரபரப்பு தொற்றியது. இதில் ஆதிக்கம் செலுத்திய பிரணாய் 3வது செட்டை கைப்பற்றி, 21-11, 13-21, 21-7 என்ற செட் கணக்கில் லின் டானை தோற்கடித்தார். இதன் மூலம் பிரணாய் 3வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of