என்னது ஒரு சூப் விலை இவ்வளவா?

468

சீனா, ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் அதிக விலை கொண்ட சூப். ஒரு கிண்ண சூப் விலை 1,37,277 ரூபாய். அம்மாடியோவ் யாரு இந்த சூப்பை வாங்குவார் என்ற  கேள்விக்கு, அங்கு அதிகமாகவே சூப் விற்று வருகிறது.  ‘ஹாவோஸோங்ஹாவோ பீஃப் நூடுல் சூப்’ என்ற பெயரில் இயங்கும் உணவகத்தில்தான்  விற்பனை ஆகிறது.

அப்படி என்னடா இருக்கு இவ்வளவு காசு என்றால்,

உலகிலேயே விலை அதிகமுள்ள 12 பொருட்கள் இதில் சேர்த்து உள்ளனர். இந்த சூப்பில் ஒரு கலாச்சரத்தையும் அதன் சாரம்ஸத்தையும் சேர்த்து தயாரித்ததால் இந்த விலை. அவர்களின் கலாச்சாரமாக 4 பொருட்கள் வானிலிருந்தும் 4 பொருட்கள் நிலத்திலிருந்தும் 4 பொருட்கள் கடலிலிருந்தும் எடுத்து தயாரிக்கப்படுகிறது. இந்த சூப்பை உலகிலே தலைசிறந்த 12 சமையல் கலைஞர்கள் சூப்பை தயாரிக்கிறார்கள். இந்த சூப்பை உடனே ஆர்டர் செய்து உடனே சாப்பிட முடியாது. ஒரு மாதத்துக்கு முன்பே சொல்லி வைக்க வேண்டும். தேவையைப் பொறுத்தே சூப்புக்கு வேண்டிய பொருட்களைத் தயார் செய்கிறார்கள். இந்த சூப் தயாரிக்க கால அவகாசம், செலவும் ஆகிறதால் தான் சூப்பின் விலை 1,37,277 ரூபாய் என்கிறார்.

இதே முறையில் அடுத்த இடத்தில் சூப் விற்பனை தைவானின் ‘நு பா பா’ விற்க்கப்படுகிறது. இதன் விலை 22,732 ரூபாய்!

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of