இந்திய அணு ஆயுதங்களின் பாதுகாப்பில் உலகநாடுகள் கவனம் செலுத்த வேண்டும் – இம்ரான் கான்

279

இந்திய அணு ஆயுதங்களின் பாதுகாப்பில் உலகநாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.

இந்தியாவின் அணு ஆயுத கொள்கையில் எதிர்காலத்தில் மாற்றம் வரலாம் என தெரிவித்த இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் கருத்து, இந்தியாவின் பொறுப்பற்ற தன்மையை கட்டுகிறது என பாகிஸ்தான் விமர்சனம் செய்துள்ளது. இந்திய அணு ஆயுதங்களின் பாதுகாப்பு பற்றி உலக நாடுகள் பொறுப்புடன் கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் இம்ரான் கான் கேட்டுக்கொண்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “பாசிச, இந்து இனவெறி ஆதிக்கமான மோடி ஆட்சியின் கீழ் இருக்கும் இந்தியாவின் அணு ஆயுதங்களின் பாதுகாப்பு பற்றி உலகம் பொறுப்புடன் கவனிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of