கோஹ்லி 11,000 ரன் சாதனை!

347

மான்செஸ்டர்: இந்திய அணி கேப்டன் கோஹ்லி, ஒருநாள் போட்டி வரலாற்றில் அதிவேகமாக 11 ஆயிரம் ரன்களை எட்டிய வீரர் என்ற புதிய உலக சாதனை படைத்தார்.

பாகிஸ்தானுக்கு எதிராக மான்செஸ்டர் நகரில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் 57 ரன்களை கடந்த இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி ஒருநாள் போட்டி வரலாற்றில் அதிவேகமாக 11 ஆயிரம் ரன்களை எட்டிய வீரர் என்ற உலக சாதனை படைத்தார்.

இவர் 230 போட்டிகளில் இம் மைல்கல்லை எட்டினார். இதற்கு முன் இச்சாதனை இந்திய ஜாம்பவான் சச்சின் (284 போட்டி) வசம் இருந்தது. இரண்டாவது மூன்றாவது இடங்களில் முறையே ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் (295), இந்தியாவின் கங்குலி (298) உள்ளனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of