கிரிக்கெட்டை விட்டு வெளியேறும் ஐந்து ஜாம்பவான்கள்.., அதிர்ச்சியில் ரசிகர்கள்!

1526

தெருவில் கிரிக்கெட் விளையாடும் சிறுவன் தொடங்கி கிரிக்கெட்டின் கடவுளான தெண்டுல்கர் வரை அத்தனை பேருக்கும் ஒரே கனவுதான். உலகக்கோப்பை. அதை மட்டும் வென்றுவிட்டால் போதும் உலகத்தையே வென்றதற்குச் சமமாகும் என வீரர்கள் மட்டுமின்றி ரசிகர்களும் நினைக்கின்றனர்.

2019 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டியுடன் 5 ஜாம்பவான்கள் விடைபெறுகின்றனர். இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் வரும் 30 ஆம் தேதி தொடங்கி, ஜூலை 14-ஆம் தேதி வரை உலகக் கோப்பை போட்டி நடக்கிறது. இதில் மொத்தம் 10 நாடுகளின் அணிகள் கலந்து கொள்கின்றன.

ஒவ்வொரு நாடும் 15 வீரர்கள் கொண்ட பட்டியலையும் வெளியிட்டுள்ளன. இந்த உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், உள்ளிட்டவை பட்டம் வெல்லும் வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இதற்கிடையே தற்போது ஜாம்பவான்களாக கோலோச்சி வரும் நட்சத்திர வீரர்கள் 5 பேர் இந்த உலகக் கோப்பையுடன் விடைபெறுகின்றனர்.

கிறிஸ் கெயில் (மேற்கிந்திய தீவுகள்)

பந்துவீச்சாளர்கள் வீசும் பந்துகளை விண்ணில் ராக்கெட்டுகளாக மாற்றி தனது அதிரடியின் மூலம் ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜாம்பவான் கிறிஸ் கெயில். 7 மாதங்கள் கழித்து மீண்டும் கடந்த பிப்ரவரி மாதம் தான் மீண்டும் ஒருநாள் அணியில் இடம் பெற்றார்.2019 உலகக் கோப்பையே தான் ஆடும் கடைசி ஒருநாள் போட்டியாகும் என அறிவித்தார். மீண்டும் அணியில் இடம் பெற்ற கெயில், தனது தேவையை முதலிடத்தில் உள்ள இங்கிலாந்து தொடரில் உணர்த்தினார்.

2 சதம், 2 அரைசதத்துடன் 424 ரன்களை குவித்தார். உலகக் கோப்பையிலும் தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தால், 1979-க்கு பின் முதன்முறையாக மேற்கிந்திய தீவுகளுக்கு கோப்பையை பெற்றுத் தந்து விடைபெறுவார் என எதிர்பார்க்கலாம். இவர் விளையாடும் 5 வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியாகும்.

ஷோயிப் மாலிக் (பாகிஸ்தான்)

பாகிஸ்தான் கிரிக்கெட்டில் முக்கிய இடம் பெற்றவர் ஷோயிப் மாலிக். கடந்த 1999-இல் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக ஒருநாள் ஆட்டத்தில் அறிமுகமானார். சிறந்த பேட்ஸ்மேன், சுழற்பந்து வீச்சாளர், சிறந்த பீல்டர் என பெயர் பெற்றவர். 282 ஒருநாள் ஆட்டங்களில் மொத்தம் 7481 ரன்களை குவித்த ஷோயிப், 156 விக்கெட்டுகளையும் 96 கேட்ச்களையும் பிடித்துள்ளார்.கடந்த ஆண்டு ஜிம்பாப்வே தொடரின் போதே, உலகக் கோப்பையுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவ்வப்போது பாகிஸ்தான் அணிக்கு கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார்.

ஜேபி டுமினி (தென்னாப்பிரிக்கா)

ஜீன் பால் டுமினி எனப்படும் ஜேபி டுனிமி, தென்னாப்பிரிக்க அணியில் தவிர்க்க முடியாத ஆல்ரவுண்டர். பல மாதங்களாக காயத்தால் அவதிப்பட்ட அவர், தனது சொந்த ஊரான கேப் டவுனில் கடைசி ஒருநாள் ஆட்டத்தில் ஆடிய போது, 2019 உலகக் கோப்பையுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.கொழும்புவில் இலங்கைக்கு எதிராக அறிமுகமான டுமினி தனது அணியில் முதல் 10 வீரர்கள் பட்டியலில் எப்போதும் இடம் பெறுபவர். தென்னாப்பிரிக்காவுக்காக 194 ஒருநாள் ஆட்டங்களில் ஆடியுள்ள அவர், 5047 ரன்களை குவித்துள்ளார். அவர் இல்லாதது தென்னாப்பிரிக்க அணியில் வெற்றிடத்தை ஏற்படுத்தும்.

டேல் ஸ்டெய்ன் (தென்னாப்பிரிக்கா)

உலகின் அதிவேக பயங்கரமான வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக திகழ்கிறார் டேல் ஸ்டெயின். கடந்த 2 ஆண்டுகளாக தோள்வலியால் அவதிப்பட்டு வரும் ஸ்டெயின் தென்னாப்பிரிக்க டெஸ்ட் அணியின் வெற்றிகளில் முக்கிய பங்கு வகித்தவர்.எனினும் ஒருநாள் ஆட்டங்களில் அவரது செயல்பாடு சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. ஆனால் வரும் ஒருநாள் உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சில் முக்கிய தூணாக விளங்குவார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதமே தான் உலகக் கோப்பையோடு ஓய்வு பெறுவதாக அறிவித்தார். கடந்த 2005-இல் ஒருநாள் ஆட்டத்தில் அறிமுகமான ஸ்டெய்ன் 196 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். டெஸ்ட்களில் 439 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இம்ரான் தாஹிர் (தென்னாப்பிரிக்கா)

தென்னாப்பிரிக்க அணியின் பவுலிங் பிரிவில் முக்கிய இடம் பெற்றுள்ளவர் இம்ரான் தாஹிர். அவர் விக்கெட் வீழ்த்திய பின் கொண்டாடுவதே தனி அழகாக இருக்கும்.தாஹிரும், இந்த உலகக் கோப்பையுடன் ஓய்வு பெற உள்ளார். தென்னாப்பிரிக்காவின் வெற்றிகரமான சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர் தாஹிர் ஆவார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of