நிறைவுற்றது புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு | Palamedu Jallikattu

500

பொங்கல் பண்டிகையை ஒட்டி, புகழ்பெற்ற பாலமேடு பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8 மணிக்கு ஆரவாரத்துடன் தொடங்கியது. இந்த வீரவிளையாட்டில் 700 காளைகளும் அந்த காளைகளை பிடிக்க 936 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.

ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம், மாவட்ட ஆட்சியர் வினய், அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் முன்னிலையில் வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதனையடுத்து ஒவ்வொரு சுற்றுகளாக வீரர்கள் களமிறக்கப்பட்டு, ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளுடன் காளையர்கள் மல்லுக்கட்டினர்.

இதில், 16 காளைகளை பிடித்த பிரபாகரன் சிறந்த மாடுபிடி வீரராக தேர்வானார். அவருக்கு மாருதி கார் பரிசாக வழங்கப்பட்டது. 13 காளைகளை அடக்கிய ராஜா இரண்டாம் இடமும், 10 காளைகளை அடக்கிய கார்த்திக் 3-ம் இடமும் பிடித்தார். இருவருக்கும் பரிசுக்கோப்பைகள் வழங்கப்பட்டன.