விடாது துரத்திய கொரோனா – உயிரிழந்த பிரபல பாடலாசிரியர்

2505

உலகம் முழுவதும் கொரோனா தனது கோரத்தாண்டவத்தை ஆடிக்கொண்டிருக்கிறது. சாதி, மதம், இனம், மொழி என எதையும் பார்க்காமல், 82 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை கொரோனா வைரஸ் காவு வாங்கியுள்ளது.

இதற்கு பிரபலங்களும் விதி விலக்கல்ல. இதுவரை உலகம் முழுவதும் பல்வேறு பிரபலங்களும், இந்த நோயில் சிக்கி தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் உலகின் சிறந்த பாடலாசிரியர்களில் ஒருவராக இருந்த ஜான் பிரைன் என்பவர், கொரோனா வைரசுக்கு சிசிக்சை பெற்று வந்த நிலையில், பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதுதொடர்பான தகவலை அவரது குடும்பத்தினர் உறுதிபடுத்தியுள்ளனர். இந்த தகவல், அவரது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.