முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சினுக்கு உலகின் உயரிய லாரியஸ் விருது..!

763

முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு, விளையாட்டு உலகின் உயரிய லாரியஸ் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு உலகின் உயரிய விருதாக கருதப்படும் லாரியஸ் விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2011 உலககோப்பை வெற்றியை தொடர்ந்து, இந்திய வீரர்கள், சச்சினை தோளில் சுமந்து சென்ற நிகழ்வு, சிறந்த தருணமாக மக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஜெர்மனி நாட்டில் நடந்த சர்வதேச விழாவில், இதற்கான லாரியஸ் விருதை சச்சின் பெற்றுக் கொண்டார். இந்த விழாவில், சிறந்த அணிக்கான விருது, தென் ஆப்ரிக்கா ரக்பி அணிக்கு வழங்கப்பட்டது. அதேபோல், சிறந்த வீராங்கனையாக அமெரிக்க ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சைமன் பைல்ஸ் வென்றார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of